வீட்டு மாடித்தோட்டம் அமைத்தோருக்கு பரிசு


வீட்டு மாடித்தோட்டம் அமைத்தோருக்கு பரிசு
x

வீட்டு மாடித்தோட்டம் அமைத்து பராமரித்தோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

கரூர், 
கரூர் மாநகராட்சி சார்பில் வீட்டு மாடித்தோட்டம் அமைத்து பராமரித்தோருக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இதில் கரூர் மாநகராட்சி பகுதியில் மாடி வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரிக்கும் 82 பேருக்கு புத்தகம், மரக்கன்று மற்றும் இயற்கை உரம் பரிசாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் மாடி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இவ்விழா மாடி வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

Next Story