தெங்கம்புதூர் அருகே முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் உடைப்பு
தெங்கம்புதூர் அருகே முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் உத்தண்டன் குடியிருப்பில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளியே சிறிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்ம நபர்பகளை போலீசார் ேதடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story