புதிய துணை சுகாதார மையங்கள்


புதிய துணை சுகாதார மையங்கள்
x
தினத்தந்தி 28 March 2022 1:03 AM IST (Updated: 28 March 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் புதிய துணை சுகாதார மையங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்.

சாத்தூர், 
சாத்தூர் தாலுகா வெங்கடாசலபுரம் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய 2 இடங்களில்  புதிய துணை சுகாதார நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய துணை சுகாதார மையக்கட்டிடங்கள் மற்றும் கிராம செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலு.சிவலிங்கம், சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  அதேபோல விருதுநகர் தாலுகாவில் மெட்டுக்குண்டு கிராமத்தில்  துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களையும் கிராம செவிலியர் குடியிருப்புகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story