கொல்லங்கோட்டில் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கொல்லங்கோட்டில் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொல்லங்கோடு,
மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை அடையாளம் தெரியாமல் மாற்றியமைத்து பதிவு எண் இல்லாமல் ஓடும் வாகனங்களையும், பள்ளி, கல்லூரி பகுதிகளில் தேவையின்றி சுற்றித்திரியும் இளைஞர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் ஆலோசனையின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளின் அடையாளங்களை மாற்றி, பதிவு எண் இல்லாமல் ஓட்டி வந்தார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வாலிபரை பிடித்து போலீஸ் நிைலயம் கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story