வெறிநாய்கள் கடித்து 7 சிறுவர்-சிறுமிகள் படுகாயம்


வெறிநாய்கள் கடித்து 7 சிறுவர்-சிறுமிகள் படுகாயம்
x
தினத்தந்தி 28 March 2022 1:09 AM IST (Updated: 28 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் வெறிநாய்கள் கடித்து 7 சிறுவர்-சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.

பரமக்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் மேல தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அந்த தெருவில் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வெறிநாய்கள் திடீரென அந்த குழந்தைகளை கடிப்பதற்கு விரட்டியுள்ளது. உடனே அந்த குழந்தைகள் அலறி அடித்து ஓடினர். ஆனாலும் விடாமல் சுகைனா ஆப்ரின் (7) தொகிதா (4) உள்பட 7 சிறுவர்-சிறுமிகளை கை, கால், இடுப்பு ஆகிய பகுதிகளில் கடித்து குதறின.  இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை கற்களை வீசி விரட்டினர். கதறி அழுத அந்த குழந்தைகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சிறுவர்களையும், குழந்தைகளையும் விடுவதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story