நாகர்கோவிலில் தி.மு.க. பிரமுகரின் ஆட்டோவுக்கு தீ வைப்பு

நாகர்கோவிலில் தி.மு.க. பிரமுகரின் ஆட்டோவுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 28 March 2022 1:10 AM IST (Updated: 28 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தி.மு.க. பிரமுகரின் ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ஆட்டோ எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் தி.மு.க. பிரமுகரின் ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ஆட்டோ எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. பிரமுகர்
நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுபுறத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48), தி.மு.க. பிரமுகர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். 
நேற்றுமுன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இந்தநிலையில் நள்ளிரவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம்-பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து தீயை       அணைத்த    னர். அதற்குள் ஆட்டோ முழுமையாக எரிந்து நாசமானது.
போலீசார் விசாரணை
பாலசுப்பிரமணியன் ஆட்டோவுக்கு நள்ளிரவில் மர்மநபர் யாரோ தீ வைத்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதுபற்றி வடசேரி போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story