புகையிலை விற்ற 3 பேர் கைது


புகையிலை விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 1:13 AM IST (Updated: 28 March 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் புகையிலை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று புத்தேரி பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்களை விற்ற புளியடி கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது22) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 
இதேபோல் நாகர்கோவில் வடசேரி போலீசார் ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற வினோத்குமாரை (35) கைது செய்தனர். மேலும், கடையில் இருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பள்ளிவிளையை சேர்ந்த சேகர் (75) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 11 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Next Story