குலசேகரம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு
குலசேகரம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்தார்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே உள்ள ஆண்டிஏலாவைச் சேர்ந்தவர் சுரேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதாகுமாரி (வயது38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லதா குமாரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த லதாகுமாரி திடீரென தன்மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். தீயின் வெப்பம் தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த லதாகுமாரியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story