தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடும் சரிவு
தஞ்சை உழவர் சந்்தையில் காய்கறி விலை கடும் சரிவு அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாஞ்சிக்கோட்டை:
தஞ்சை உழவர் சந்்தையில் காய்கறி விலை கடும் சரிவு அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட்டது.
உழவர் சந்ைத
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. தற்போது உழவர் சந்தையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உழவர் சந்தை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் நேற்று காய்கறி விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய விலை விவரம் வருமாறு:-
வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை
கத்தரிக்காய் கிலோ ரூ.16-க்கும், வெண்டைக்காய் ரூ.24-க்கும், அவரைக்காய் ரூ.24-க்கும்,, புடலங்காய் ரூ.16-க்கும், பாகற்காய் ரூ.28-க்கும், முள்ளங்கி ரூ.18-க்கும், கொத்தவரங்காய் ரூ.24-க்கும், மாங்காய் ரூ.48-க்கும், வெங்காயம் ரூ.24-க்கும், பல்லாரி ரூ.24-க்கும், உருளைக்கிழங்கு ரூ.28-க்கும், பீட்ரூட் ரூ.18-க்கும், பீன்ஸ் ரூ.36-க்கும், சவ்சவ் ரூ.18-க்கும், நூல்கோல் ரூ.16-க்கும், முட்டைக்கோஸ் ரூ,18-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story