80 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
காரியாபட்டி அருகே நீர்நிலை பகுதிகளில் இருந்த 80 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா வெள்ளாங்குளம் கண்மாய், தொட்டியங்குளம் கண்மாய், கீழ்கள்ளிக்குளம் கிராம கண்மாய் ஆகிய நீர்நிலைகளில் 80 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தனக்குமாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தாசில்தார் தனக்குமார் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுடன் அந்த இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அப்போது காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர், தலையாரி உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story