முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது -கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது -கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
x
தினத்தந்தி 28 March 2022 1:33 AM IST (Updated: 28 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார்

சிவகங்கை, 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சிவகங்கையில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. அங்கு நடக்கும் ஆட்சி முழுக்க சிங்களர்களின் குடும்ப ஆட்சி. ஒரே குடும்பத்திடம் முழு அதிகாரமும் உள்ளது. பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் இந்தியாவை நோக்கி அகதிகளாக வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு அவர்களுக்கு நிதி உதவி அளித்து அந்த நிதி நமது தமிழ் மக்களுக்கு சென்றடைவதை கண்காணிக்க வேண்டும்.
வெளிநாட்டு பயணம்
மேலும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்த காங்கிரஸ் போராட்டங்களை நடத்தினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்பதாகவும், ஆண்டிற்கு ஒரு முறையல்ல 3 முறை சென்று அங்குள்ள வளர்ச்சி, தொழில், மற்றும் அங்கு வாழும் தமிழர்களை சந்திக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு பயன்படும்
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தை விமர்சனம் செய்வதை போல் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பயணத்தை விமர்சிப்பாரா?
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story