சிவகாசி சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்குவது எப்போது?


சிவகாசி சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 28 March 2022 1:35 AM IST (Updated: 28 March 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி சிவன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சிவகாசி, 
சிவகாசி சிவன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ராஜகோபுரம்
சிவகாசியில் உள்ள விஸ்வநாதசுவாமி கோவில் கடந்த 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த சிவன் கோவிலில் உள்ள லிங்கம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதனாலேயே சிவகாசி என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் மொத்தம் 1 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த கோவிலின் நுழைவு பகுதியில் சிறிய அளவிலான கோபுரம் மட்டும் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி பக்தர்கள் அறநிலையத்துறைக்கு பல முறை கோரிக்கை வைத்தனர்.
கட்டுமான பணி 
இதை தொடர்ந்து ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பல முறை இந்த கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலை அப்போதைய அரசின் தலைமை ஸ்தபதி தட்சிணா மூர்த்தி வந்து ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அப்போது அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஒரு வருடத்துக்கு மேலாகியும் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
தொடங்கப்படுமா?
ராஜகோபுரம் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கோவில் நிர்வாகம் செய்து வரும் நிலையில் 1½ வருடங்களாக பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் சிவகாசி சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணியினை உடனே தொடங்க வேண்டும். தற்போது கோவில் நடைப் பாதையில் அன்னதானம் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க தனி அன்னதான மண்டபம் அமைக்கும் பணியினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

Next Story