களக்காடு: எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு


களக்காடு: எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 28 March 2022 1:51 AM IST (Updated: 28 March 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு

களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு கோட்டை காந்தி வீதியை சேர்ந்தவர் மீராஷா (வயது 40). இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொது செயலாளராக உள்ளார். மீராஷா இரவில் தனது காரை அங்குள்ள கோட்டை பள்ளிவாசல் முன்பு நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவும் தனது காரை அங்கு நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், பாறாங்கல்லை காரில் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. 
இந்த நிலையில் நேற்று காலையில் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து மீராஷா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story