களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2022 1:59 AM IST (Updated: 28 March 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

களக்காடு:
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்தை கண்டித்து, களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா, துணை செயலாளர் காவேரி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இன்பரசு, ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முஹம்மது காசிர் வரவேற்றார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், திருவாவடுதுறை ஆதீன குத்தகை விவசாயிகள் சங்க தலைவர் பகத்சிங், எம்.எம்.எம்.கே. மாவட்ட தலைவர் சித்திக் அலிஸிர் ரஹ்மான், புதிய புலிகள் கட்சி நிறுவன தலைவர் சுதாகர பாண்டியன், திராவிடர் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், குறிஞ்சியர் பேரவை மகளிரணி செயலாளர் இளவேயினி தங்கம், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புரட்சி பாரதம் கட்சி நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Next Story