சேலத்தில் இருந்து அரியானா மாநிலத்துக்கு பருத்தி விதைகள் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டன
சேலத்தில் இருந்து அரியானா மாநிலத்தில் 5,550 குவிண்டால் பருத்தி விதைகள் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டன.
சூரமங்கலம்:-
சேலம் ரெயில்வே கோட்ட வணிகத்துறை வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய சரக்கு போக்குவரத்தினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சேலத்தில் இருந்து அரியானா மாநிலத்துக்கு சரக்கு ரெயில் மூலம் பருத்தி விதைகள் அனுப்பப்பட்டன. 5 ஆயிரத்து 550 குவிண்டால் பருத்தி விதைகள் 25 பெட்டிகளில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சரக்கு போக்குவரத்தின் மூலம் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story