சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
ஓமலூரில் நடந்த சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தலை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
ஓமலூர்:-
ஓமலூரில் நடந்த சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தலை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
சேலம் புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் ஓமலூரில் நேற்று நடந்தது. அதன்படி ஓமலூரில் உள்ள நடராஜ செட்டியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களுக்கான அமைப்பு தேர்தல் நடந்தது.
இதேபோல் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வீரபாண்டி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களுக்கான அமைப்பு தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றியம், நகரம், பேரூர் வாரியாக வேட்பு மனுக்களை பெற்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆய்வு
இந்த பணியை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிர்வாகிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மணி, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து, சேலம் புறநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜசோழன், இணை செயலாளர் வாசுதேவன். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார், உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story