சிவகிரி பகுதியில் நாளை மின்தடை


சிவகிரி பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 28 March 2022 2:27 AM IST (Updated: 28 March 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது

சிவகிரி:
சிவகிரி விஸ்வநாதபேரி, தேசியம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 
எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, அருளாச்சி என்ற திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்ரமணியாபுரம் உள்ளார், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story