விவசாய முன்னேற்ற கழக கூட்டம்
சேலத்தில் விவசாய முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நடந்தது.
சேலம்:-
விவசாய முன்னேற்ற கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட செயலாளர் ஜெயமணி வரவேற்றார். இதில், விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி கலந்து கொண்டு விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை உடனே அமல்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற வட்டியில்லா கடன் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் மரவள்ளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் மரவள்ளி உற்பத்தியாளர்களின் நலன் காக்க சேலம் அல்லது நாமக்கல் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மரவள்ளி பூங்கா அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story