சுகபிரசவத்தில், பெண்ணுக்கு 4½ கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது
ஹாசனில் பெண்ணுக்கு 4½ கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்
ஹாசன்: ஹாசனில் பெண்ணுக்கு 4½ கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு பிரசவம்
ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா எம்.கே.ஒசூரு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமேஷ். இவரது மனைவி ஹேமலதா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹேமலதா 3-வது முறையாக கர்ப்பமானார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் லட்சுமேஷ், ஹேமலதாவை சென்னராயப்பட்டணா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை எடை அதிகமாக இருப்பதால் சுக பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்வதாகவும் லட்சுமேசிடம் தெரிவித்தனர். இதற்கு அவரும் சம்மதித்தார்.
4½ கிலோ எடையில்...
இந்த நிலையில் ஹேமலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. அப்போது சுக பிரசவத்தில் குழந்தையை வெளியே எடுக்க டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன்படி ஹேமலதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 4½ கிலோ எடை இருந்தது.
இதையடுத்து குழந்தைக்கும், ஹேமலதாவுக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 4½ கிலோ எடையில் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றதால் டாக்டர்கள் ஆச்சரியமடைந்தனர்.
Related Tags :
Next Story