மனைவி கண்முன் ஆற்றில் மூழ்கி கணவர் பலி
மனைவி கண்முன் ஆற்றில் மூழ்கி கணவர் பலியானார்
ஜீயபுரம்
மணப்பாறை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 24). இவரும், பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், புதுமண தம்பதி நேற்று முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்திருந்தனர். பின்னர் பொழுதை போக்கிய அவர்கள் பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரசாந்த் ஆழமான பகுதிக்கு சென்றதால் மனைவி கண் முன்னே ஆற்றில் மூழ்கினார். அப்போது பிரியதர்ஷினியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து நீரில் மூழ்கிய பிரசாந்தை மீட்டு தனியார் வாகனம் ஒன்றின் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story