சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சி மண்ணச்சநல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் (வயது 19) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரிடம் பழகினார். நாளடைவில் இது காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து நடராஜன் அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போக்சோவில் கைது
விசாரணையில், நடராஜன் மற்றும் 16 வயது சிறுமி முசிறியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் நடராஜனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story