22 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு: நெல்லை அரசு பள்ளியில் நடனமாடி மகிழ்ந்த முன்னாள் மாணவிகள்


22 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு: நெல்லை அரசு பள்ளியில் நடனமாடி மகிழ்ந்த முன்னாள் மாணவிகள்
x
தினத்தந்தி 28 March 2022 2:51 AM IST (Updated: 28 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு பள்ளியில் நடனமாடி மகிழ்ந்த முன்னாள் மாணவிகள்

நெல்லை :
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1999-ம் ஆண்டு மேல்நிலை வகுப்பு முடித்த மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் மாணவிகள் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். ‘கேக்’ வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் பழைய கால சம்பவங்களை நினைவு கூறும் வகையில் பள்ளிக்கூட வாசலில் மாங்காய், நெல்லிக்காய் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அதனை வாங்கி சுவைத்தனர். நிகழ்ச்சியின்போது முன்னாள் மாணவிகள், தங்களின் குழந்தைகளுடன் ஆட்டம், பாட்டத்துடன் நடனமாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றும் நட்டினர்.
சென்னை, ஓசூா், மும்பை, திருப்பூா், திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் இருந்து முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் 1999-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்து, இந்த பள்ளியை விட்டு வெளியேறினோம். சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து உள்ளோம். அன்றைய காலகட்டத்தில் தோழிகளுடன் நாங்கள் படித்த நினைவுகளை மீண்டும் நேரில் சந்தித்து பகிர்ந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. ஆசிரியர்கள், தோழிகளை சந்தித்தது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வாக இருக்கிறது” என்றனர்.

Next Story