நெல்லை: 31 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


நெல்லை: 31 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x
தினத்தந்தி 28 March 2022 2:58 AM IST (Updated: 28 March 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

31 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது

நெல்லை:
நெல்லை மாநகரில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான வரிவசூல் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, உரிமக்கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் அதிக அளவில் நிலுவை வைத்து நெடுங்காலமாக வரி செலுத்தாமல் உள்ளவர்களது வீடு, அலுவலகங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நெல்லை மண்டலத்தில் 2 குடிநீர் இணைப்புகளும், மேலப்பாளையம் மண்டலத்தில் 10 குடிநீர் இணைப்புகள், தச்சநல்லூர் மண்டலத்தில் 7 குடிநீர் இணைப்புகள் மற்றும் பாளையங்கோட்டை மண்டலத்தில் 12 குடிநீர் இணைப்புகள் என மொத்தம் 31 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
எனவே மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்த்திடும் வகையில் நிலுவை வரிகளையும் மற்றும் மாநகராட்சி குத்தகை இனங்களை (கடை வாடகை) காலதாமதம் இன்றி மாநகராட்சி கணினி வரி வசூல் மையத்தில் செலுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Next Story