தபால்துறை அதிகாரி மீது ரூ.2 லட்சம் மோசடி புகார்


தபால்துறை அதிகாரி மீது ரூ.2 லட்சம் மோசடி புகார்
x
தினத்தந்தி 28 March 2022 3:01 AM IST (Updated: 28 March 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

தபால்துறை அதிகாரி மீது ரூ.2 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டது

துறையூர்
 துறையூரை அடுத்த சங்கம்பட்டி, ரெட்டியார் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சரவணன். விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது ஊரில் உள்ள கிளை தபால் நிலையத்தில் வைப்பு நிதியாக ரூ. 2 லட்சத்தை தபால் நிலைய அதிகாரியாக பணிபுரியும் வைரி செட்டிபாளையத்தை சேர்ந்த யசோதாவிடம்(வயது42) கொடுத்துள்ளார். இந்நிலையில் தபால் நிலைய உயர் அதிகாரிகளின் ஆய்வின்போது சரவணன் செலுத்திய ரூ.2 லட்சத்தை யசோதா கையாடல் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அஞ்சலக கோட்டம், துறையூர் (மேற்கு) உட்கோட்ட அதிகாரி அமர்நாத், துறையூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story