‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 March 2022 3:17 AM IST (Updated: 28 March 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வீணாகும் குடிநீர் 
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பழையபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாய் உடைந்து வீணாக செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.

குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு சூரம்பட்டியில் இருந்து மாரியம்மன் கோவில் செல்லும் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் பலர் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குண்டும்-குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், ஈரோடு.

ஓடையில் செடி-கொடிகள் 
கோபி டவுனில் இருந்து தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் கீழே கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. அந்த ஓடையில் ஆகாயத்தாமரைகள், செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் கழிவுநீர் செல்வதற்குத் தடையாக உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஆகாயத்தாமரைகள், செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு வழிவகுக்க வேண்டும்.
விஸ்வம், கோபி

 
ஆபத்தான மின்கம்பம் 
அம்மாபேட்டை அருகே குறிச்சியில் இருந்து ஒலகடம் செல்லும் ரோட்டில் தர்கா அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி அபாயகரமான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விழலாம். இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குறிச்சி.

குடிநீர் பற்றாக்குறை
பவானிசாகர் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சி 7-வது வார்டுக்கு உள்பட்டது ரோஜா நகர். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. குடிநீர் குழாயில் மிகக் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் ரோஜா நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், ரோஜா நகர், அரியப்பம்பாளையம்.

சாக்கடையில் அடைப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை தொட்டியில் உள்ள தண்ணீர் வெளியேற முடியாம் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே சாக்கடை அடைப்பை நீங்கவும், தொட்டியில் உள்ள தண்ணீரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், கருங்கல்பாளையம்.


Next Story