வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 28 March 2022 3:21 AM IST (Updated: 28 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது

திருச்சி
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டசிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொதுநலம், அறுவை சிகிச்சை, தாய்சேய் நலம், கண், தோல், பல், எலும்பு, காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கான மருத்துவ நிபுணர்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ரத்தம் மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், இ.சி.ஜி.பரிசோதனைகளும் செய்யப்பட்டது. முகாமில் நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள், ஊழியர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை அளித்தனர். நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story