புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி தலைவராக ராமகிருஷ்ணன் தேர்வு
இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி தலைவராக ராமகிருஷ்ணன் தேர்வு
புளியங்குடி:
புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி தலைவருக்கான தேர்தல், மனோ கல்லூரியில் நடந்தது. தேர்தல் பார்வையாளராக நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் தவமணி செயல்பட்டார். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டி.என்.புதுக்குடி இந்து நாடார் கமிட்டி வரிதாரர்கள் 1,359 பேர் வாக்களித்தனர். இதில் புளியங்குடி அனைத்து வர்த்தக சங்க தலைவரும், நகை வியாபாரிகள் சங்க பொருளாளருமான ராமகிருஷ்ணன் 913 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி தலைவராக தேர்வான ராமகிருஷ்ணன், புளியங்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டார். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தொழில் அதிபர்கள் சுரண்டை எஸ்.வி.கணேசன், வாசுதேவநல்லூர் தங்கப்பழம், ஸ்ரீராம் பீடி குருசாமி, மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இயக்குனர் ராஜ்ஜியம், இந்து நாடார் உறவின்முறை கமிட்டி செயலாளர் கருப்பையா, இந்து நாடார் உறவின்முறை கமிட்டி பள்ளி தலைமையாசிரியர் வெண்மதி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ராஜபாண்டி, மாணிக்கம், முன்னாள் உதவி தலைமை ஆசிரியர்கள் குணசேகரன், ராஜேந்திரன், மாரியம்மன் கோவில் சந்தா தலைவர் வன்னியராஜ், நாடார் வாலிபர் சங்க வன்னியராஜ், காமராஜ் மெமோரியல் கிளப் தலைவர் அருள் அய்யனார், தொழிலதிபர் விவேகானந்தன், டாக்டர்கள் ராஜ்குமார், ராஜேஷ், ரவீந்திரன், பிரகாஷ் கண்ணா, கண்ணா தியேட்டர் செல்வ பிரகாஷ் மற்றும் பலர் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story