வாடகைக்கு இயக்கப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
வாடகைக்கு இயக்கப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன
திருச்சி
தமிழகத்தில் ஆட்டோ சவாரியை போல, மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை ஏற்றிச்செல்ல இணையதளத்தில் ஆப் இருக்கிறது. இதனை பயன்படுத்தி விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றிச்செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனை தடுக்க தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவிட் டார். இதையடுத்து துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.குமார் மற்றும் லால்குடி, துறையூர், முசிறி இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. திருச்சி மன்னார்புரத்தில் நடந்த சோதனையின்போது, ஆப் மூலம் முன்பதிவு செய்து 4 மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை வாடகைக்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story