கோழி குஞ்சை காப்பாற்ற முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் பலி
கோழி குஞ்சை காப்பாற்ற முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் பலியானார்
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கரவுபாடி கிராமம் மதரமூலே கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் முகேரா (வயது 35). இவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உப்பலாவில் மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வசந்த், சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவருடைய வீட்டில் வளர்த்து வந்த கோழி குஞ்சு ஒன்று அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதனால் கிணற்றில் விழுந்த கோழி குஞ்சை காப்பாற்றுவதற்காக வசந்த், கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வசந்த் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவர் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமக உயிரிழந்தார். இதுகுறித்து விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story