தென்காசி மாவட்ட ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளருக்கு வரவேற்பு


தென்காசி மாவட்ட  ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளருக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 28 March 2022 3:39 AM IST (Updated: 28 March 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

நெல்லை:
தென்காசி மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக இருந்த தி.மு.ராஜேந்திரன், மாநில துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று நெல்லை மாவட்டத்துக்கு வந்த ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரனுக்கு, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கும், நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கும் தி.மு.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர்கள் உவரி ரைமண்ட் (நெல்லை), வெற்றிவேல் (குமரி), ரமேஷ், புதுக்கோட்டை செல்வம் (தூத்துக்குடி), தென்காசி மாவட்ட பொருளாளர் சுரண்டை ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.ராஜேந்திரன், திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டுக்கு சென்றார். அங்கு வைகோவின் தாயார் மாரியம்மாளின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட துணை செயலாளர் மோகன்தாஸ், யூனியன் தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், துணை தலைவர் முருகேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர்கள் மணிமொழி சந்துரு (கலிங்கப்பட்டி), பாலகிருஷ்ணன் (ஜமீன் தேவர்குளம்) மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story