வீட்டில் மடிக்கணினி திருட்டு


வீட்டில் மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 28 March 2022 3:42 AM IST (Updated: 28 March 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தா.பழூர்:

மடிக்கணினி திருட்டு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் தொடர்ந்து சிறு, சிறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காரைக்குறிச்சி ஸ்ரீபுரந்தான் சாலையில் வசித்து வருபவர் இளவரசன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்கள் திருப்பூர் மற்றும் சேலத்தில் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனால் ஸ்ரீபுரந்தானில் உள்ள வீட்டில் அவரது மனைவி மலர்க்கொடி(41) மற்றும் மகன் கவுதமன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அவர்களது வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு மலர்க்கொடி விழித்துக் கொண்டதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். மலர்க்கொடி சுதாரித்துக்கொண்டு அக்கம், பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் பார்த்தபோது, அவரது மகளுக்கு பிளஸ்-2 படித்தபோது அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினி திருடப்பட்டது தெரியவந்தது.
கண்காணிக்க வேண்டும்
காரைக்குறிச்சி கிராமத்தில் இதேபோல் வீடுகளில் பெண்கள் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு செல்போன்கள் உள்ளிட்ட சிறுசிறு எலக்ட்ரானிக் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல்வேறு இடங்களில் திருட முயற்சி செய்யும் மர்மநபர்கள், ஆட்கள் விழித்துக்கொண்டு துரத்தினால், யாரிடமும் சிக்காமல் தப்பி ஓடி விடுகின்றனர். காரைக்குறிச்சி கிராமத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்கள் குறித்து சிலர் போலீசில் புகார் செய்கின்றனர். சிலர் சிறிய பொருள்தானே திருட்டுபோனது என்று புகார் செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.
எனவே திருட்டு சம்பவங்களை தடுக்க காரைக்குறிச்சி கிராமத்தில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்கள், குழந்தைகளுடன் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து திருட்டு சம்பவம் நடப்பதால் காரைகுறிச்சி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். திருட்டு சம்பவங்கள் குறித்து தா.பழூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story