மாட்டை திருடிய 2 பேர் கைது


மாட்டை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 3:43 AM IST (Updated: 28 March 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

மாட்டை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:

காளை மாடு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபு(வயது 39). விவசாயி. இவர் காளை மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் அந்த மாட்டை அப்பகுதியில் உள்ள நிலத்தில் மேய்த்துவிட்டு வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் மாட்டை அடைத்துள்ளார். இதையடுத்து நேற்று காலை கொட்டகையில் பிரபு பார்த்தபோது மாட்டை காணவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிரபு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர்.
2 பேர் கைது
இந்நிலையில் நேற்று மாலை மீன்சுருட்டி சந்தையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் மணகெதி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(52), சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஜெபாஸ்டியன்(48) என்பதும், அவர்கள் பிரபுவின் மாட்டை திருடி மீன்சுருட்டி சந்தையில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டை மீட்டு பிரபுவிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து ஜெய்சங்கர், ஜெபாஸ்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story