ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 March 2022 3:43 AM IST (Updated: 28 March 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அய்யாவு உடையார் ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்நிலையில் தற்போது ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் இந்த ஏரியை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, தாசில்தார் ராஜமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஏரிக்கரையை அளவீடு செய்து கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சரியான அளவில் கரை அமைத்து ஏரியை ஆழப்படுத்த வேண்டும். அப்போதுதான் தண்ணீர் தேங்கி நிற்கும், என்றனர்.

Related Tags :
Next Story