பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவருக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகாததால் மனமுடைந்த விஜயலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அப்போது விஜயலட்சுமியின் மகன் சரத்குமார் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு மூடப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து வீட்டிற்குள் பார்த்தபோது, விஜயலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story