பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சேகர் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கலெக்டர் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிப்பது. அரசுத்துறை வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு தர ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிரைவர்கள் அனைவரும் பணியில் இருக்கும்போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் மார்க்கண்டன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story