மின்ஒயர் உரசியதால் தீப்பிடித்த வைக்கோல் லாரி
மின்ஒயர் உரசியதால் தீப்பிடித்த வைக்கோல் லாரி
விக்கிரமசிங்கபுரம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அருகே உள்ள டாணா- ஆம்பூர் சாலையில் வந்தபோது மேலே செல்லும் மின்ஒயரில் வைக்கோல் உரசி திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story