“மகாபாரத கதை எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது” - ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


“மகாபாரத கதை எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது” - ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 28 March 2022 4:36 PM IST (Updated: 28 March 2022 4:36 PM IST)
t-max-icont-min-icon

மகாபாரத கதை எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசன் சார்பில், மகாபாரதம் ஒரு இந்திய கலை மற்றும் கலாசாரம் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் வெளியிட, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘மகாபாரதம் கதை எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது. துரியோதனன் பிறந்த நேரம் சரியில்லை. ஜாதகமும் சரியில்லை என்று அவன் சிறு வயதிலேயே கணிக்கப்பட்டது. அவரது தந்தை அவனை பாசத்துடன் வளர்த்தார். ஆனால், சிறு பிரச்சினைக்காக குழந்தையாக இருக்கும்போதே பீமனை கொலை செய்ய முயற்சித்தான். வளர்ந்ததும் பாஞ்சாலியை மடியில் அமரச்சொன்னான். இதற்கெல்லாம் தண்டனை வழங்கும் விதமாக அவனது சாவு அமைந்தது. நீதிமன்றத்தை பொருத்தவரை சத்தியமும், தர்மமும் தேவையில்லை. ஒரு வழக்கில் சாட்சியும், ஆதாரமும்தான் தேவை. ஆனால், தர்மத்தை நாட்டில் உள்ள 80 சதவீதம் பேர் நம்புகின்றனர்’ என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசன் தலைவர் டாக்டர் நந்திதா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story