மனைவியின் நடத்தையில் சந்தேகம் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது


மனைவியின் நடத்தையில் சந்தேகம் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 5:07 PM IST (Updated: 28 March 2022 5:07 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கம்பம்:
நடத்தையில் சந்தேகம்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்லமணி (35). கம்பம் சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் மகுடபதி (50). தொழிலாளி. இவரது மனைவி பவுன் (48).
செல்லமணி,  கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு பவுனுடன் வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் செல்லமணியின் நடத்தையில் மாரிச்செல்வத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
கத்தியால் குத்தி கொலை
இந்தநிலையில், தனது மனைவியின் நடத்தை மாறியதற்கு மகுடபதியும் அவரது மனைவி பவுனும்தான் காரணம் எனக்கூறி அவர்களிடம் மாரிச்செல்வம் தகராறில் ஈடுபட்டு வந்தார். 
நேற்று முன்தினம் இரவு மகுடபதி நகராட்சி தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பீடி வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது மாரிச்செல்வம் அவரை வழிமறித்து அவதூறாக பேசி வாக்குவாதம் செய்தார். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாரிச்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகுடபதியின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். 
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி ைவக்கப்பட்டது. 
இந்த கொலை குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---
படங்கள்

Next Story