குதிரை மசால் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
குதிரை மசால் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளுக்கு தீவனமாகும் குதிரை மசால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மாற்றுத்தொழில்
பல்லடம் சுற்றுவட்டாரபகுதிகளில், விவசாயிகள் மாற்றுத்தொழிலாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் பால் உற்பத்திக்காக, மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு உலர் தீவனம், புண்ணாக்கு, பசுந்தீவனம் என சரிவிகிதமாக பிரித்து அளித்து வருகின்றனர்.
தோட்டப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் உலர்தீவனம் உள்ளிட்டவைகளை உன்கின்றது, மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படாத நேரத்தில் அவைகளுக்கு பசுந்தீவனம் அளிக்க குதிரை மசால், நேப்பியர் ரக புல், சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பசுந்தீவனங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், குதிரை மசால் சாகுபடி. தற்போது பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
வீட்டுமனைகளாக
இதுகுறித்து பனப்பாளையம் விவசாயிகள் கூறியதாவது
விவசாயம் போக ஆடு, மாடு, போன்றவைகளை வளர்த்து வருகிறோம். முன்பு பல்லடத்தில் பரவலாக மேய்ச்சல் நிலங்கள் இருந்தது. தற்போது ரியல் எஸ்டேட் வந்த பின்பு, அவைகள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டன. இதனால் மேய்ச்சல் தீவனம் குறைந்து, புண்ணாக்கு மற்றும் பசுந்தீவனம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குதிரைமசால், சோளம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு உணவாக வழங்கி வருகிறோம்.
குதிரை மசால் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு சுமார் 7 கிலோ விதை துாவி வாரம் ஒரு முறை, தண்ணீர் பாய்ச்சினால் போதும். உரம் வைத்து செடி பூக்கின்றபோது அறுவடை செய்யலாம். சுழற்சி முறையில் அறுவடை செய்வதால் தீவன தட்டுப்பாடு ஏற்படாது. அதிக பரப்பில் சாகுபடி செய்தால் அறுவடை செய்து தேவைப்படுவோருக்கு விற்பனை செய்யலாம். ஆனால், பசுந்தீவன உற்பத்திக்கான விதைகள் தற்போது போதியளவு கிடைப்பதில்லை.
ஆலோசனைகள்
இந்த நிலையில் முன்பு கால்நடை துறை சார்பில் பசுந்தீவன உற்பத்திக்கான விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. பசுந்தீவனம் சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளதால் கால்நடை வளர்ப்போருக்கு, பசுந்தீவன உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பருவமழை தொடங்கும் முன்பு அந்தத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால், கால்நடை வளர்ப்போருக்கு பெறும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.
Related Tags :
Next Story