தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம்
திருத்தப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. முறைசாரா நல வாரியங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். மின்சார சட்டம் 2020 மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
தினமும் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும். நவரத்தினங்கள் எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களைவிற்க கூடாது என்பது உள்பட 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று முதல் நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
வேலை நிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. எம்.எல்.எப், எல்.பி.எப், எச்.எம்.எஸ். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், சத்துணவு உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்கள் இயங்க வில்லை. வங்கிகள் செயல்படவில்லை. அரசு அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
அரசு பஸ்கள்
அதன்படி உடுமலையில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டன. உடுமலைகிளை அரசுபோக்குவரத்துக் கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள்37ம், டவுன்பஸ்கள் 57ம் எனமொத்தம் 94 பஸ்கள் உள்ளன. தொழிற்சங்கத்தினர் பணிக்கு வராததால் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. காலையில் வெளியூர் செல்லும் அரசு பஸ்கள்9-ம், டவுன் பஸ்கள்13ம்என22அரசுபஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மதியத்திற்கு பிறகு வெளியூர் செல்லும் பஸ்கள்5 ம், டவுன்பஸ்கள் 6ம் என11 அரசு பஸ்கள் மட்டுமே ஓடின. காலையில் இயக்கப்பட்ட அரசு பஸ்களின் எண்ணிக்கை பிற்பகலில் பாதியாக குறைக்கப்பட்டது. உடுமலையில் தனியார் பஸ்களில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் 5ம், டவுன் பஸ்கள்19ம்என மொத்தம் 24பஸ்கள் உள்ளன.இந்த தனியார் பஸ்கள் ஓடின.
காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கூட்டம் மத்திய பஸ் நிலையத்தில் அதிகமாக இருந்தது. பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் ஒருசில வழித்தடங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
தள்ளுமுள்ளு
பொது வேலை நிறுத்தத்தையொட்டி தொழிற்சங்கங்கள் சார்பில் உடுமலை தலைமை தபால் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துமறியல் போராட்டம் நடந்தது.இதில் தொழிற்சங்கத்தினருடன் அங்கன்வாடி பணியாளர்களும் கலந்து கொண்டனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் தபால் அலுவலகம் முன்புகச்சேரி வீதியில் தரையில் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.இதையொட்டி அவர்களை போலீசார் கைது செய்துவேன்களில்ஏற்றி, சதாசிவம் வீதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மொத்தம்44ஆண்களும், 294 பெண்களும் என 338 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு அலுவலகங்கள்
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் உள்ள 42 ஊழியர்களில22பேர் பணிக்கு வந்திருந்தனர்.20பேர் வரவில்லை .உடுமலை ஒன்றியத்தில் 36 ஊராட்சி செயலாளர்களில் 18பேர் பணிக்கு வந்திருந்தனர்.18பேர் வரவில்லை.வருவாய் துறையில்உடுமலை தாலூகா அலுவலகத்தில் மொத்தம் உள்ள 32 ஊழியர்களில் 9பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். 23பேர் பணிக்கு வரவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். நகராட்சி அலுவலக ஊழியர்கள்வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
சாலை மறியல்
மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள தொழிற்சங்கங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மடத்துக்குளம் நால் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். கட்டுமான தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதனால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story