அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்டவைகளை கலைந்து அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலனை பாதுகாக்க வேண்டும். அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கோஷங்கள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குரு சந்திரசேகரன், அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் சண்முகம், வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.
----
Related Tags :
Next Story