புதிதாக கட்டிய தொகுப்பு வீடுகளை அமைச்சர் ஆய்வு
பந்தலூர் அருகே புதிதாக கட்டிய தொகுப்பு வீடுகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு ஆய்வு செய்தார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே புதிதாக கட்டிய தொகுப்பு வீடுகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக சிறுபான்மைத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நீலகிரி மாவட்டம் பந்தலூருக்கு வந்தார். தொடர்ந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லியில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் முதற்கட்டமாக கட்டப்பட்டு உள்ள 70 தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:- இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்களில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
அனைத்து வசதிகள்
அங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, விரைவில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள 70 பேருக்கு முதல்-அமைச்சர் உத்தரவு பெற்று தொகுப்பு வீடுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அயலக தமிழர் நலன்மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், திட்ட இயக்குனர்(மாவட்ட முகமை) ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா, கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார்கள் நடேசன், சித்துராஜ், ஒன்றிய ஆணையாளர் மோகன்குமாரமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story