தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 28 March 2022 8:24 PM IST (Updated: 28 March 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், இதற்கு காரணமான டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

காவேரிப்பாக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், இதற்கு காரணமான டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சாமி தரிசனம்

காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோரிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் துளசி பிரசாதம், மஞ்சள், குங்குமம், பூ, உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அருகில் உள்ள ரங்கநாதர் பெருமாளையும் தரிசனம் செய்தார். தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டாஸ்மாக் இல்லாத நிலை

உரிமைக்காக போராடும் தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யாமல், இரண்டு நாள் ஊதியம் தந்து, போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தி.மு.க.வை பொறுத்தவரை மத்திய அரசுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. இது ஒரு தவறான விஷயம். இது குழந்தையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டும் கதையாக இருக்கிறது. வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து காணப்படுகிறது. 

இதற்கு டாஸ்மாக் கடையும் ஒரு காரணம். ஆகவே தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாத நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். தற்போது சமூக வலைத்தளங்களால் அதிக குற்ங்கள் நடைபெறுகிறது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இதற்கு எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகிறது என்றால், குடும்ப உறுப்பினர்களும் உடன் சென்றது தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

 இவ்வாறு அவர் பேசினார். அப்போது மாவட்ட செயலாளர் நித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story