வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் மறியல்
மத்திய அரசுக்கு எதிரான வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 1,350 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:

நாடு தழுவிய வேலைநிறுத்தம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. எல்.ஐ.சி. மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
மேலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழலை தடுக்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி நேற்று முதல் நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி, எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் நகர தொழிற்சங்கங்களின் இணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மான்ட், அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
இதற்கிடையே திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் அழகர்சாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் கண்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பாலன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராஜன், எம்.எல்.எப். மாவட்ட தலைவர் மோகன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சப்-கலெக்டர் அலுவலக சாலை, ஒய்.எம்.ஆர்.பட்டி சந்திப்பு ஆகியவற்றில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் அஜாய்கோஷ், ஒன்றிய செயலாளர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபால்பட்டி, குஜிலியம்பாறை
கோபால்பட்டி, அதிகாரிபட்டியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைகண்ணன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பாப்பாத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜிலியம்பாறையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட 35 பேர் கைதானார்கள். நிலக்கோட்டை நால்ரோடு அருகே, சி.ஐ.டி.யூ. மாவட்ட இணைச் செயலாளர் சாதிக் அலி தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம், வத்தலக்குண்டு
நத்தம் பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொறுப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. இதில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வத்தலக்குண்டு எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் ரமேஷ்பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி, ஒட்டன்சத்திரம்
பழனியில் அரசு மருத்துவமனை முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகி பிச்சமுத்து தலைமையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக பஸ்நிலையம் நோக்கி வந்த அவர்கள் திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலுக்கு முயன்ற 260 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நெய்க்காரப்பட்டியை அடுத்த அ.கலையம்புத்தூரில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மறியலுக்கு முயன்ற 100 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். தொப்பம்பட்டியில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கனகு தலைமையில் மறியலுக்கு முயன்ற 88 பேரை கீரனூர் போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 79 பேர் கைது செய்யப்பட்டனர்.
1,350 பேர் கைது
மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 1,350 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story