தெருவில் வீசப்பட்ட சாமி சிலைகள்


தெருவில் வீசப்பட்ட சாமி சிலைகள்
x
தினத்தந்தி 28 March 2022 9:23 PM IST (Updated: 28 March 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சாமி சிலைகள் தெருவில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழனி:
பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் உள்ள அரசமரத்து அடியில் சுமார் 1 அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் அருகே மூஞ்சுலு, ராகு, கேது போன்ற சிறிய சிலைகளும் உள்ளன. இந்தநிலையில் ராகு, கேது சிலைகள் அந்த பகுதியில் உள்ள தெருவில் அடுத்தடுத்து கிடந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆனால் சிலைகள் எந்த வித சேதமும் அடையவில்லை. இதையடுத்து சிலைகளை எடுத்து வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story