‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’க்கு நன்றி
தாடிக்கொம்பு அருகே ஆத்துப்பட்டியில் மின்கம்பம் சேதமடைந்து இருப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அங்கு சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் வைக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், ‘தினத்தந்தி’க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
-சசிக்குமார், ஆத்துப்பட்டி.
சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
வடமதுரை அருகே பிலாத்துவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உள்ளே புகுந்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் மர்மநபர்களால் சமூகவிரோத செயல்கள் நடைபெறும் சூழல் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெரால்டு, வக்கம்பட்டி.
திறக்கப்படாத ரேஷன் கடை
ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வீ.கூத்தம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் கடை கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே அப்பகுதி பொதுமக்களின் நலன்கருதி வீ.கூத்தம்பட்டியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ராமு, வீ.கூத்தம்பட்டி.
மின்விளக்குகள் அமைக்க வேண்டும்
வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பகுதியில் சாலையோரம் மின்விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரசன்னா, வத்தலக்குண்டு.

Related Tags :
Next Story