பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்-சித்தராமையா வலியுறுத்தல்
பெங்களூரு, மார்ச்.29-
கர்நாடக சட்டசபையில் நேற்று கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா தனது துறை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறுக்கிட்டு பேசியதாவது:-
மந்திரி ஈசுவரப்பா பேசும்போது, நரேகா திட்டத்திற்கு கூடுதல் மனித வேலை நாட்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறினார். ஆனால் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் நரேகா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.98 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் கர்நாடகத்திற்கான நிதி ஒதுக்கீடும் குறையும். நிலைமை இவ்வாறு இருக்க மத்திய அரசு எப்படி கூடுதல் மனித வேலை நாட்களுக்கு அனுமதி வழங்கும்.
மராட்டிய மாநிலத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. அந்த உத்தரவு மராட்டியம் மட்டுமின்றி கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 3 யோசனைகளை சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த மக்களுக்கு அநீதி ஏற்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story