80 சதவீத பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் தவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் தவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் தவித்தனர்.
80 சதவீத பஸ்கள் ஓடவில்லை
மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று வேலைக்கு வரவில்லை.
இதனால் மாவட்டம் முழுவதும் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் பெரும்பாலானவை தனியார் பஸ்கள் ஆகும். தனியார் பஸ்களை பொறுத்தவரை ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமின்றி இதர வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன. அதேநேரம் 80 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளிலும் பஸ்கள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
பயணிகள் தவிப்பு
இதை சிறிதும் எதிர்பார்க்காத மக்கள் வழக்கம் போல் அன்றாட பணிகளை மேற்கொள்ள செல்வதற்காக திண்டுக்கல், பழனி உள்ளிட்ட முக்கிய பஸ்நிலையங்களில் குவிந்தனர். ஆனால் பஸ் நிலையங்களுக்கு ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. அதிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
எனவே வேறுவழியில்லாமல் வேலைக்கு செல்வோர், இளைஞர்கள் படிக்கட்டில் நின்று கொண்டும் கம்பிகளை பிடித்து தொங்கி கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். ஒருசிலர் ஒவ்வொரு பஸ்சை பார்த்ததும் ஓடிச்சென்று இடம் பிடிக்க முடியாமல் திரும்பி வந்து நின்றனர். ஒருகட்டத்தில் கால்கடுக்க காத்திருக்க முடியாமல் ஆட்டோக்களில் பணியிடங்களுக்கு சென்றனர்.
வெளியூர் பஸ்கள்
மேலும் திண்டுக்கல்லை பொறுத்தவரை தென்மாவட்டங்களின் நுழைவுவாயில் போன்று அமைந்துள்ளது. இதனால் மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை உள்பட அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் வௌியூர் பஸ்களை பார்ப்பதே அரிதாக இருந்தது.
இதற்கிடையே அதிலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை என்பதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், அந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்தனர். அதேபோல் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியவில்லை. ஆட்டோ, சரக்கு வாகனங்கள், மினிவேன்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர்.
மாணவர்கள் சிரமம்
இது ஒருபுறம் இருக்க கொரோனாவால் மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகளில் தற்போது வகுப்புகள் மும்முரமாக நடக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் மாணவ-மாணவிகள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்றைய தினம் வழக்கம் போல் பஸ்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அந்தந்த ஊர்களில் காத்திருந்தனர். இதில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் காலையில் இருந்தே ஏராளமான மாணவ-மாணவிகள் குவிந்தனர். ஆனால் வழக்கமான நேரத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் வராததால், மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
இதனால் இலவசமாக பஸ்சில் சென்று வந்த மாணவ-மாணவிகள் நேற்று வேறுவழியின்றி ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். ஒருசில ஆட்டோக்களில் புளி மூட்டைகளை ஏற்றுவதை போன்று மாணவ-மாணவிகள் ஏற்றி செல்லப்பட்டனர். இதேபோல் உறவினர்களின் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வரை பயணித்து சென்றனர். பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் சிரமப்பட்டதோடு, ஆபத்தான பயணத்தையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நிரம்பி வழிந்த ரெயில்கள்
உள்ளூர் பஸ்கள் மட்டுமின்றி வெளியூர் பஸ்களும் அதிக அளவில் ஓடவில்லை. இதனால் வெளியூர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரமுடியாமல் தவித்தனர். அதேநேரம் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதால், பொதுமக்களின் பார்வை ரெயில் மீது திரும்பியது. இதையடுத்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுத்து ரெயிலில் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய தினம் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூடுதல் கட்டணம் வசூல்
பஸ்கள் ஓடாததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பினரும் ஆட்டோ, மினிவேன், வேன்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. ஒருசில கிராமங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் மக்கள் பயணம் செய்தனர். இதை பயன்படுத்தி வாடகை வாகனங்களில் பொதுமக்களிடம் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

Related Tags :
Next Story