காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியைக்கு ஒரு ஆண்டு சிறை


காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியைக்கு ஒரு ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 March 2022 10:01 PM IST (Updated: 28 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியைக்கு ஒரு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் சங்கர கோமதி. இவருடைய மகள் சுப்பு சுந்தரவடிவு (வயது 53). அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய இவர் கடந்த 2014-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.அப்போது சுப்பு சுந்தரவடிவு தனக்கு கிடைத்த பணப்பலன் ரூ.16 லட்சத்தை தன்னுடன் பணியாற்றிய ஆசிரியை சோமு (53) என்பவருக்கு கடனாக வழங்கினார். பின்னர் பல ஆண்டுகளாக சோமு கடனை திருப்பி தராததால், தனது பணத்தை திருப்பி தருமாறு சுப்பு சுந்தரவடிவு கேட்டார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சோமு கடன்தொகைக்காக வங்கி காசோலையை சுப்பு சுந்தரவடிவிடம் வழங்கினார். ஆனால் சோமுவின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதுகுறித்து சுப்பு சுந்தரவடிவு கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம், குற்றம் சாட்டப்பட்ட சோமுவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ஒரு மாதத்துக்குள் கடன்தொகை ரூ.16 லட்சத்தை திருப்பி தரவில்லையெனில், மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுவிக்குமாறும் உத்தரவிட்டார்.
ஆசிரியை சோமு தற்போது தூத்துக்குடி  அருகே செட்டியூரணியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story