மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார். சக மாணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மோகனூர்:-
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார். சக மாணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மோகனூர் அருகே நடந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவர்கள்
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த காமராஜ் மகன் பூர்வின் சங்கர் (வயது 19). இவர், தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் படித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதே கல்லூரியில் படிக்கும் அவருடைய நண்பர் சப்தகிரி வாசன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு பூர்வின் சங்கர் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சப்தகிரி வாசன் ஓட்டினார். பூர்வின் சங்கர் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தார்.
ஒருவர் சாவு
என்.புதுப்பட்டி பகுதியில் ஒரு ஓட்டல் அருகில் வந்த போது லாரி ஒன்று, இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் இருவரையும் ஆம்புலன்சு மூலம் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சப்தகிரி வாசன் பரிதாபமாக இறந்தார். பூர்வின் சங்கர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சப்தகிரி வாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story